கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.;

Update:2025-10-24 08:09 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தின் பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வங்காள விரிகுடா கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மலையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்