தமிழகத்தில் 8 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதே சமயம், தமிழகத்தின் பிற இடங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இன்று தமிழகத்தில் உள்ள 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.
இதன்படி வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக பாளையங்கோட்டை மற்றும் ஈரோட்டில் 103 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. இதே போல் மீனம்பாக்கம், கரூர் பரமத்தி மற்றும் திருத்தணியில் 101 டிகிரி, தஞ்சாவூரில் 100 டிகிரி வெப்பம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.