பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
பிற்பகல் 1 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும் (ஞாயிற்றுகிழமை), நாளையும் (திங்கட்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 பணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.