ஏர் பலூன் தீப்பற்றி விபத்து; 8 பேர் பலி
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.;
பிரேசிலா,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் மிகவும் பிரபல சுற்றுலா மாகாணமாக சாண்டா கடரினா உள்ளது. இம்மாகணத்தில் பிரயா கிராண்டி பகுதியில் ஹாட் ஏர் பலூனில் (வெப்ப காற்று பலூன்) சுற்றுலா பயணிகள் வானில் பயணிக்கும் நிகழ்வு மிகவும் பிரபலம்.
அந்த வகையில் பிரயா கிராண்டில் இன்று காலை 21 பயணிகள் ஏர் பலூனில் வானில் பயணம் மேற்கொண்டனர். நடுவானில் ஏர் பலூன் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அதில் தீப்பற்றி எரிந்தது. இதனால், ஏர் பலூன் வெடித்து வானில் இருந்து கீழே விழுந்தது.
இந்த சம்பவத்தில் ஏர் பலூனில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.