கனடாவில் இந்திய நடிகர் கபில் சர்மா உணவகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு
இதே கபேயில் கடந்த ஜூலை 9ம் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.;
ஒட்டவா,
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
கப்ஸ் கஃபே என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த மாதம்தான், கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டு இருந்தது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.