இந்தோனேசியாவில் நிலச்சரிவு - 2 பேர் பலி

நிலச்சரிவில் சிக்கி 21 பேர் மாயமாகினர்;

Update:2025-11-15 04:07 IST

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய ஜாவா மாகாணம் சிலாகேப் மாவட்டத்தில் பல கிராமங்களில் கனமழையின் போது நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் மாயமாகினர். தகவலறிந்து விரைந்து சென்ற பேரிடர் மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்