கனடா தேர்தலில் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட 22 பேர் வெற்றி

கனடாவில் கடந்த 28ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது;

Update:2025-05-02 19:15 IST

ஒட்டாவா,

கனடாவில் கடந்த 28ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து மார்க் கார்னி கனடாவின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கனடா நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலரும் போட்டியிட்டனர். இதிலும் குறிப்பாக பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட பலர் போட்டியிட்டனர். இதில் பெரும்பாலானோர் வெற்றிபெற்று எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, நடந்து முடிந்த தேர்தலில் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட 22 பேர் எம்.பி.க்களாக வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம் கனடா நாடாளுமன்றத்தில் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட எம்.பி.க்கள் 6 சதவீதக உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்