வெனிஸ் நகருக்கான பகல் நேர சுற்றுலா வரி உயர்வு
சுற்றுலா பயணிகள் விட்டுச் செல்லும் குப்பைகளால் வெனிஸ் நகரம் வெகுவாக மாசு அடைகிறது.;
ரோம்,
இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரம் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இது யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அதே சமயம் அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் அந்த நகரம் வெகுவாக மாசு அடைகிறது. எனவே அங்கு பகல் நேர சுற்றுலா வரியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி வெனிஸ் நகருக்கு பகல் நேர சுற்றுலாவிற்கு செல்ல 3 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்பவர்களுக்கு 5 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் ரூ.485) கட்டணமும், அதற்கு பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கு 10 யூரோ(சுமார் ரூ.971) கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.