அடுத்த ஆண்டில் உலகின் முதல் ட்ரில்லியனர்: எலான் மஸ்க் படைக்கப்போகும் புதிய உலக சாதனை
எலான் மஸ்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு புதிய உச்சத்தைத் தொடும் என கூறப்படுகிறது.;
வாஷிங்டன்,
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சியால், எலான் மஸ்க் அடுத்த ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி டாலர் (Trillionaire) சொத்து மதிப்பு கொண்ட உலகின் முதல் மனிதர் என்ற சாதனையைப் படைப்பார் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், எக்ஸ் ஏ.ஐ., ஸ்டாா்லிங்க் உள்ளிட்ட பிரபல உலக நிறுவனங்களின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து வருகிறார்
எலான் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பானது ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோரின் மொத்த சொத்துக்களை விடவும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க் முதல் டெய்லர் ஸ்விப்ட் வரை உலகின் முன்னணி 7 செல்வந்தர்களின் சொத்துக்களை ஒன்றிணைத்தாலும், எலான் மஸ்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு அதையும் மிஞ்சி புதிய உச்சத்தைத் தொடும் என கூறப்படுகிறது.