சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-06 09:18 IST

பீஜிங்,

சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 26-ந்தேதி சீனாவில் ரிக்டர் 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்