பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு

பாகிஸ்தானில் இரவு 8.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-10-11 21:32 IST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இன்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.23 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.19 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.04 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்