ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்?

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.;

Update:2025-08-09 17:57 IST

ரஷியாவிடம் இருந்து இந்திய எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து கச்சா எண்ணை பெற்று வருகின்றன. ரஷியாவிடம் கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது நிர்ப்பந்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே சர்வதேச சந்தை நிலவரப்படி தற்போது ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதுதான் இந்தியாவுக்கு லாபமாக இருக்கும் என்று தெரிய வந்தது.

நடப்பு ஆண்டில் ரஷியாவிடம் கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தும்பட்சத்தில் இந்தியா எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.76 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணை பெறாவிட்டால் அடுத்த நிதியாண்டில் அது ரூ.1 லட்சம் கோடி என்ற அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எஸ்.பி.ஐ. ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணை வாங்கப்படும். இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த தகவலும் தரவில்லை” என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்