வங்கதேசத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-10-21 05:48 IST

டாக்கா,

வங்கதேசத்தில் நேற்று மாலை 5.43 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் 21-ந்தேதி வங்கதேசத்தில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையமும் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது. இதுபோல் அதிக ஆழம் இல்லாமல் உருவாகும் நிலநடுக்கங்களால் பெரும்பாலும் கட்டிடங்களுக்கு அதிக சேதங்கள் ஏற்படுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்