மியான்மர்: 3 நாட்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மியான்மரில் கடந்த 3-ந்தேதி காலை 9.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-10-06 05:33 IST

நைபிடா,

இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை 1.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 3.6 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவல் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் அசாமில் இருந்து 133 கி.மீ. தென்கிழக்கே திப்ரூகார் நகரில், 73 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று நேற்று (5-ந்தேதி) நள்ளிரவு 12.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 3.7 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் மிசோரம் மாநிலத்தில் இருந்து 84 கி.மீ. கிழக்கு வடகிழக்கே சம்பை நகரில், 88 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கடந்த 3-ந்தேதி காலை 9.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலத்தில் இருந்து 48 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே உக்ருல் நகரில், 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

மியான்மரில் 3 நாட்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மியான்மரில் சுனாமி பாதிப்பு உள்பட மித மற்றும் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்