இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய அம்சம்: பயனர்களுக்கு மெட்டா கொடுத்த சூப்பர் அப்டேட்

இன்ஸ்டாகிராம் நிறுவனம் பயனர்களை கவர அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.;

Update:2025-12-11 13:22 IST

சமூக வலைத்தளங்களில் பயனர்கள் இடையே அதிகம் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. உலகம் முழுவதும் 3 பில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எனப்படும் ஷார்ட் வீடியோக்களே இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது.

விதவிதமான வீடியோக்கள் போட்டு அதிக லைக்ஸ் கமெண்டுகளையும் பெற ரொம்பவே கிரியேட்டர்கள் ஒருபக்கம் மெனக்கெடுகிறார்கள். இன்னொரு பக்கம், ரீல்ஸ்களை பார்த்தே பொழுதை கழிப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள் பயனர்கள். இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை பொறுத்தவரை போட்டியை சமாளிக்கவும் பயனர்களை கவரவும் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இன்ஸ்டாவில் பப்ளிக் அக்கவுண்டில் பகிரப்படும் ஸ்டோரீஸ்களை பயனர்கள் தங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த பதிவு மூலம் ஒருவர் உங்களை டேக் செய்யாவிட்டாலும் அந்த ஸ்டோரீஸ்களை பயனர்கள் பகிர முடியும். பிரபலங்களின் ஸ்டோரீஸ்களை இதன் மூலம், பயனர்கள் தங்கள் பக்கத்தில் பகிர முடியும் என்பதால் இன்ஸ்டா பயனர்கள் இந்த வசதியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்