அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு; மாணவர் பலி
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் பிராங்க்போர்ட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 2-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடி யாக பல்கலைக் கழகத்துக்கு வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை மடக்கிப் பிடித்தனர். படுகாயம் அடைந்த மாணவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்ததால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக அங்கி ருந்தவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.