‘பாலிவுட் சினிமாவுக்கு கதை எழுதலாம்’ பாகிஸ்தான் ராணுவம் விமர்சனம்
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.;
இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் பஹல்காம் தாக்குலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பின்னர் இருதரப்பு ராணுவத்தினரும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
4 நாட்கள் தொடர் தாக்குதலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுக்கு வந்தது. இந்தநிலையில் இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இது தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ராஜீவ் காய் பாகிஸ்தான் மீதான தாக்குதலில் 100 பாகிஸ்தான் வீரர்கள் செத்ததாக தெரிவித்தார். இந்தநிலையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. இதில் இந்தியா ராணுவத்தை விமர்சித்து கருத்து பதிவிட்டது. தொடர்ந்து பொய், புரளிகளை பேசி உண்மையை மறைத்து வரலாற்றை திரிக்கும் முயற்சிகளில் இந்திய ராணுவம் ஈடுபடுகிறது. இதற்கு பதிலாக இந்திய ராணுவம் பாலிவுட் சினிமாக்களுக்கு கதை எழுதலாம் என்றுள்ளது.