ஸ்காட்லாந்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி ராஜினாமா
ஸ்காட்லாந்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.;
எடின்பர்க்,
ஸ்காட்லாந்தில் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஜேமி ஹெப்பர்ன் (வயது 46). கடந்த 17-ந்தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சி தலைவரான கன்சர்வேட்டிவ் எம்.பி. டக்ளஸ் ரோசை ஜேமி கடுமையான வார்த்தையால் விமர்சித்து பேசினார். இதனை தொடர்ந்து டக்ளசை அவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து டக்ளஸ் பிரதமர் ஜான் ஸ்வின்னிக்கு புகார் அளித்தார்.
இந்தநிலையில் எம்.பி. மீதான தாக்குதல் புகாரை தொடர்ந்து ஜேமி ஹெப்பர்ன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் ஸ்காட்லாந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.