வங்காளதேச தலைநகரில் இந்திய விசா விண்ணப்ப மையம் மீண்டும் திறப்பு
போராட்டங்கள் முடிவுக்கு வந்ததால் டாக்காவில் உள்ள விசா மையம் மீண்டும் திறக்கப்பட்டது.;
டாக்கா,
வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள இந்திய தூதரகம் நோக்கி அவர்கள் பேரணியும் சென்றனர்.
இதைத் தொடர்ந்து டாக்கா, குல்னா, ராஜ்சாகி ஆகிய இடங்களில் உள்ள இந்திய விசா மையங்கள் மூடப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டன.
தற்போது அங்கே போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளதால் டாக்காவில் உள்ள விசா மையம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அதேநேரம் குல்னா, ராஜ்சாகியில் உள்ள மையங்கள் நேற்றும் மூடப்பட்டு இருந்தன.