பாகிஸ்தானில் 3.7 கோடி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து
பாகிஸ்தானில் கடந்த 15-ந்தேதி முதல் ஒரு வார காலம் தேசிய போலியோ தடுப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. க;
இஸ்லாமாபாத்,
உலகில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மட்டுமே போலியோ தொற்று காணப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில் பாகிஸ்தானில் கடந்த 15-ந்தேதி முதல் ஒரு வார காலம் தேசிய போலியோ தடுப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக நடந்த முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட 3.7 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளதாக தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் அறிவித்தது. மொத்தம் 4.5 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மருந்து வழங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.