நார்வேயில் கடலோர பண்ணை வீட்டிற்குள் புகுந்த கப்பல்; கேப்டன் தூங்கியதால் நேர்ந்த சம்பவம்

கடலில் பெரிய அலைகள் ஏற்பட்டதை பயன்படுத்தி கப்பல் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.;

Update:2025-05-29 04:21 IST

ஓஸ்லோ,

நார்வே நாட்டில் சுமார் 135 மீட்டர் நீளமுள்ள என்.சி.எல். சால்டன் என்ற சரக்கு கப்பல், வழி தவறி கடற்கரையோரம் உள்ள ஜோகன் ஹெல்பர்க் என்பவரது பண்ணை வீட்டின் தோட்டத்திற்குள் புகுந்தது. அலைகள் குறைவாக இருந்ததால் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், சுமார் 4 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர், கடலில் பெரிய அலைகள் ஏற்பட்டதை பயன்படுத்தி கப்பல் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் ஜோகன் ஹெல்பர்க்கின் பண்ணை வீட்டு தோட்டம் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதனிடையே, என்.சி.எல். சால்டன் சரக்கு கப்பலின் 2-ம் நிலை கேப்டன் பணியின்போது தூங்கியதே இந்த விபத்திற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்