சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்

Update:2025-03-19 00:14 IST
Live Updates - Page 3
2025-03-18 21:56 GMT

டிராகன் விண்கலம் பூமியில் தரையிறங்கத்தொடங்கியது. விண்கலத்தின் பாராசூட் வெற்றிகரமாக இயங்கியது.

2025-03-18 21:53 GMT

சுனிதா வில்லியம்ஸ் வரும் டிராகன் விண்கலம் பூமி திரும்பும் காட்சியை ஒளிபரப்பியது நாசா. 

2025-03-18 21:52 GMT

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வரும் டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தது. 

2025-03-18 21:47 GMT

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர், அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷியாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமி திரும்புகின்றனர். 

2025-03-18 21:44 GMT

சுனிதா வில்லியம்ஸ் வரும் விண்கலம் தற்போது வளிமண்டலத்தில் நுழைந்துவிட்டது.

2025-03-18 21:42 GMT

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் வரும் விண்கலம் அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடாவில் இறங்குகிறது. விண்வெளியில் சிக்குண்ட சுனிதா, வில்மோர் பூமி திரும்புவதை ஆவலோடு மக்கள் காதிருக்கின்றனர். 

2025-03-18 20:17 GMT

சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் சேர்ந்து, 60 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். பெக்கி விட்சனின் சாதனையை சுனிதா வில்லியம்ஸ் முறியடித்துள்ளார். 

2025-03-18 19:49 GMT

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களாக சிக்கித் தவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். பாதுகாப்பாக திரும்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி விசாரித்து வருவதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார்.

2025-03-18 19:48 GMT

சுனிதா வில்லியம்ஸ் வரும் டிராகனின் விண்கலம் நீரில் தரையிறக்கத்திற்காக ஸ்பிளாஷ் டவுன் பகுதியில் வானிலையை நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கண்காணித்து வருகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, இதுவரை வானிலை நன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-03-18 18:45 GMT

குஜராத்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்ப வேண்டும் என அவரின் பூர்வீகமான மெஹ்சானாவில் உள்ள கோவிலில் கிராமத்தினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்