சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்


தினத்தந்தி 19 March 2025 12:14 AM IST (Updated: 19 March 2025 10:02 AM IST)
t-max-icont-min-icon

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்ட 4 பேரும் விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.


Live Updates

  • 19 March 2025 6:00 AM IST

    குழுவுக்கு எலான் மஸ்க் பாராட்டு - ஜனாதிபதிக்கு நன்றி

    விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்துவந்த நாசா குழுவுக்கும், திட்டத்துக்கு முன்னுரிமை அளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கும் நன்றி என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். 

  • சுனிதாவை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த டிராகன்
    19 March 2025 5:52 AM IST

    சுனிதாவை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த டிராகன்

    விண்வெளி நிலையத்தில் இருந்து 4 நிலைகளை கடந்து டிராகன் விண்கலம் பூமியில் தரையிறங்கியது. பூமிக்கு திரும்பும் 4 நிலைகளில் முதல்நிலை விண்கலம் பூமிக்கு திரும்ப தயராக இருத்தல் ஆகும்.

    2 மணி நேரத்திற்கு பின் 2-ம் நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது. 3-ம் நிலையில் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைக்கும் பணிகள் நடந்தன. 4-ம் நிலை என்பது விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சவாலான பணியை குறிக்கிறது.

  • 19 March 2025 5:36 AM IST

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்கள் இருந்த சுனிதா, வில்மோர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். விண்வெளியில் உணவு உற்பத்திக்கான லெட்யுஸ் கீரை செடி வளர்ப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

  • 19 March 2025 5:32 AM IST

    9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

  • 19 March 2025 4:54 AM IST

    9 மாதங்களுக்கு பின் பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ். சுனிதா வில்லியம்ஸ்-ன் வருகையை குஜராத் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

  • 19 March 2025 4:52 AM IST

    பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரை பூமிக்கு வரவேற்கும் விதமாக கடலில் டால்பின்கள் துள்ளி குதித்து வரவேற்றன.

  • 19 March 2025 4:48 AM IST

    மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, ஹுஸ்டன் விண்வெளி மையம் அழைத்து செல்லப்படுகின்றனர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர்.

  • 19 March 2025 4:31 AM IST

    டிராகனில் இருந்து மீட்கப்பட்ட விண்வெளிவீரர்களுக்கு அடுத்தபணியாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு வந்து சேர்ந்த விண்வெளி வீரர்கள் நால்வரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்படுகின்றனர். 

  • 19 March 2025 4:27 AM IST

    தரையிறங்கிய டிராகன் விண்கலனில் இருந்து வெளியே வந்தார் சுனிதா வில்லியம்ஸ். விண்கலனை விட்டு வெளியே வந்ததும், மீட்புக்குழுவினரோடு சுனிதா வில்லியம்ஸ் கைகுலுக்கினார். 

  • விண்கலனில் இருந்து வெளியே வரும் வீரர்கள்
    19 March 2025 4:26 AM IST

    விண்கலனில் இருந்து வெளியே வரும் வீரர்கள்

    தரையிறங்கிய டிராகன் விண்கலனில் இருந்து வீரர்கள் அமரவைத்தப்படியே வெளியே வருகின்றனர். அமர வைத்தப்படி வீரர்கள் ஒவ்வொருவராக கப்பலுக்குள் அழைத்து செல்லப்படுகின்றனர். 

1 More update

Next Story