ஜப்பானில் 200 ராணுவ பயிற்சி விமானங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரம்

ஜப்பானில் டி-4 என்ற ராணுவ பயிற்சி விமானம் குளத்தில் விழுந்து நொறுங்கியது.;

Update:2025-05-16 06:54 IST

டோக்கியோ,

ஜப்பானின் ஐச்சி மாகாணம் கோமாகி நகரில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. அங்கிருந்து டி-4 என்ற ராணுவ பயிற்சி விமானம் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் இருகா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதில் இருந்த வீரர்களின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள சுமார் 200 ராணுவ பயிற்சி விமானங்களையும் ஆய்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்