அபிஷேக் பானர்ஜி போட்டியிடும் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த பா.ஜனதா கோரிக்கை
மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி போட்டியிடும் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.;
கோப்புப்படம்
கொல்கத்தா,
இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அவற்றில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி போட்டியிடும் டயமண்ட் ஹார்பர் தொகுதியும் அடங்கும்.இந்நிலையில், பா.ஜனதா தலைவர் ஷிசிர் பஜோரியா என்பவர், மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
டயமண்ட் ஹார்பர் தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடந்தன. பா.ஜனதா முகவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள், வேறு பக்கம் திருப்பி வைக்கப்பட்டு இருந்தன. எனவே, பல்வேறு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.