'பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து' - சசி தரூர்

மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என சசி தரூர் விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-26 09:53 GMT

புதுடெல்லி,

நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும். நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. மதத்தின் அடிப்படையில் வாக்குகளை பிரிக்க பா.ஜ.க. விரும்புகிறது.

மக்களை சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பா.ஜ.க. பிரிக்கிறது. முன்பு இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற மதத்தினர் உள்பட அனைவரும் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில், பா.ஜ.க. அனைவரையும் பல பிரிவுகளாக பிரித்துவிட்டது.

ஜனநாயக அமைப்புகளையும் பா.ஜ.க. விட்டுவைக்கவில்லை. அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை சந்திக்க நேரிடுகிறது. வெளிப்படையாக பேசக்கூடிய சுதந்திரம் இல்லாத ஒரு சமுதாயத்தில் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம்."

இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்