வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-04-19 02:03 GMT

வேலூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், வேலுர் மாவட்டம் காட்பாடி தொகுதி காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்களிக்க மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்