'இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன் 100 நாள் வேலை தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்' - ராகுல் காந்தி

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தினக்கூலி 400 ரூபாயாக உயர்த்தப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

Update: 2024-03-29 05:15 GMT

புதுடெல்லி,

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006-ம் ஆண்டு 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தினக்கூலி உயர்த்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்! பிரதமர் உங்கள் சம்பளத்தை 7 ரூபாய் உயர்த்தியுள்ளார்.

இப்போது அவர் உங்களிடம், 'இவ்வளவு பெரிய தொகையை என்ன செய்வீர்கள்?' என்று கேட்கக் கூடும். மேலும் 700 கோடி ரூபாய் செலவு செய்து, உங்கள் பெயரில் 'நன்றி மோடி' என்ற பிரச்சாரமும் தொடங்கப்படலாம்.

பிரதமர் மோடியின் இந்த மகத்தான பெருந்தன்மையால் கோபம் கொண்டவர்கள், நினைவில் கொள்ளுங்கள், 'இந்தியா' கூட்டணி அரசு அமைந்த முதல் நாளே 100 நாள் வேலை தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்