'அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு தைரியமில்லை' - ராஜ்நாத் சிங்

ராகுல் காந்திக்கு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கான தைரியம் இல்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

Update: 2024-04-18 09:38 GMT

Image Courtesy : @rajnathsingh

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 26-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பதனம்திட்டா தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் அணில் கே.அந்தோணியை ஆதரித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

"கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு, ராகுல் காந்திக்கு மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான தைரியம் இல்லை. அதனால் அவர் உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்.

இருப்பினும் வயநாடு தொகுதி மக்கள் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டதாக நான் கேள்விப்படுகிறேன். நாட்டில் பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் 'ராகுல்யான்' கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தபடாமலேயே இருக்கிறது."

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்