'ராகுல் காந்தி விடுமுறைக்கு சிம்லா சென்றார்; ஆனால் ராமர் கோவிலுக்கு செல்லவில்லை' - அமித்ஷா

ராகுல் காந்தி விடுமுறைக்கு சிம்லா சென்றார், ஆனால் ராமர் கோவிலுக்கு செல்லவில்லை என்று அமித்ஷா விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-25 11:47 GMT

Image Courtesy : ANI

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலம் உனா பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அனுராக் தாக்கூரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;-

"ராகுல் காந்தியும், அவரது சகோதரியும் விடுமுறையை கழிக்க சிம்லாவுக்கு சென்றார்கள். ஆனால் அவர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு செல்லவில்லை. ஏனெனில் அவர்களுக்கு தங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயம்.

இந்த மக்களவை தேர்தலில் ஒருபுறம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை எடுக்கும் ராகுல் காந்தியும், மற்றொரு புறம் 23 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் நரேந்திர மோடி இருக்கிறார்.

'இந்தியா' கூட்டணியிடம் பிரதமர் வேட்பாளர் இல்லை. ராகுல் காந்தியிடம் 'இந்தியா' கூட்டணியின் பிரதமராக யார் இருப்பார்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஒரு வருடத்திற்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார் என்று கூறினார். இது ஒரு மளிகைக் கடை இல்லை, 140 கோடி மக்கள் வாழும் நாடு என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை நடைபெற்ற 5 கட்ட தேர்தல்களில் பிரதமர் மோடி 310 இடங்கள் கிடைத்துவிட்டன. ஆனால் ராகுல் காந்திக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்