சுடுநீரில் குளிப்பது மாரடைப்பை தடுக்குமா...? - தெரிந்து கொள்வோம் வாங்க

குளிர்காலங்களில் பெரும்பாலானோர் வெந்நீரை தான் பயன்படுத்துவார்கள்.;

Update:2025-10-08 10:55 IST

தினமும் குளிப்பது உடலில் உள்ள அழுக்கை நீக்குவதோடு நோய்கள் நெருங்காமல் பாதுகாக்கவும் செய்யும். பெரும்பாலானோர் குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்கள். குளிர்காலங்களில் வெந்நீரை பயன்படுத்துவார்கள். அதேவேளையில் ஒரு மணி நேரம் மிதமான சுடுநீரில் குளித்து வருவதன் மூலம் ஏராளமான உடல் நல நன்மைகளை பெறலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மிதமான சுடுநீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

* ஒரு மணி நேரம் மிதமான சுடுநீரில் குளிப்பது 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது எரிக்கப்படும் கலோரிகளுக்கு சமமானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அப்படி ஒரு மணி நேரம் குளித்தால் 140 கலோரிகள் செலவாகும் என்பதும் தெரியவந்துள்ளது. சுடுநீரில் குளிக்கும்போது இதயம் வேகமாக இயங்கும். அதற்கேற்ப கலோரிகளும் வேகமாக எரியும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வழக்கத்தை தொடர்ந்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும்.

* சுடுநீரில் குளியல் போடுவது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். சுடுநீரில் குளிக்கும்போது உடல் தளர்ந்து மனமும் அமைதியாகிவிடும். அதனால் ரத்த ஓட்டம் இயல்பு நிலையில் இருக்கும். அதன் காரணமாக இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் குறையும்.

* வெதுவெதுப்பான நீரில் குளிக்கும்போது ரத்த ஓட்டம் சீராகி அது நரம்பு மண்டல செயல்பாடுகளை தளர்வடைய செய்யும். சுடு நீரில் குளிக்கும்போது தசைகளில் ஏற்படும் வலிகள் உள்பட அனைத்துவிதமான உடல் வலிகளும் நீங்கிவிடும். தசைகள் தளர்வாக இருக்கும். குளிக்கும்போது கை, கால்களை நீட்டி அசைப்பது மூட்டுகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்கும்.

* கோபமாக இருந்தாலோ, ஏதாவதொரு காரணத்தால் ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தாலோ வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. அது ரத்த அழுத்தத்தை குறைய செய்வதோடு மனதையும் இலகுவாக்கும். கண்கள் முதல் மூளை வரை உடல் உறுப்புகள் இலகுவாகி நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

* நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது இதமளிக்கும். நாள்பட்ட வலிக்கும் நிவாரணம் தரும்.

Tags:    

மேலும் செய்திகள்