அடுத்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும் - ஐசிசி

இறுதி ஆட்டத்தை மட்டும் 39 ஆயிரத்து 555 பேர் நேரில் ரசித்துள்ளனர்.;

Update:2025-11-08 00:57 IST

புதுடெல்லி ,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏறக்குறைய 3 லட்சம் ரசிகர்கள் நேரில் வந்து போட்டியை கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடருக்கும் இவ்வளவு ரசிகர்கள் வந்ததில்லை. இறுதி ஆட்டத்தை மட்டும் 39 ஆயிரத்து 555 பேர் நேரில் ரசித்துள்ளனர்.

இதே போல் டி.வி. சேனல் மற்றும் டிஜிட்டல் சேவையான செயலியின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்ததிலும் இந்த உலகக் கோப்பை புதிய சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் தொடர் முழுவதையும் சேர்த்து இந்தியாவில் 44.6 கோடி பேர் பார்த்துள்ளனர்.மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை தொடர்ந்து, அடுத்த உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை 8-ல் இருந்து 10 ஆக உயர்த்துவது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று முடிவு செய்தது. இதன்படி 2029-ம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்