5-வது டி20: தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா..? இங்கிலாந்துடன் இன்று மோதல்

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது.;

Update:2025-02-02 06:13 IST

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்தியாவும், ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்தும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்