எஸ்.ஏ. டி20 லீக் கிரிக்கெட்: கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் நியமனம்
எஸ்.ஏ. டி20 லீக் தொடரின் 4-வது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
கேப்டவுன்,
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் 4-வது சீசன் அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி முதல் பிப்ரவரி 24-ந்தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், எம்.ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த 6 அணிகளையும் ஐபிஎல் அணிகளை சேர்ந்த உரிமையாளர்களே வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த சீசனுக்கான பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 85 லட்சத்துக்கு கேஷவ் மகராஜை பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.