அபிஷேக் சர்மா ஆட்டம்: நியூசிலாந்து பயிற்சியாளர் கருத்து
டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.;
சென்னை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் சேர்த்து இந்திய அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த நிலையில், அபிஷேக் சர்மா தொடர்பாக பேசியுள்ள நியூசிலாந்து பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் கூறியதாவது,
அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தில் எந்த பலவீனத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து, அவரை எதிர்த்து திட்டத்தை வகுப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. என தெரிவித்துள்ளார்.