மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.;
காந்தி நகர்,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் குஜராத் மாநிலம் வதோதரா மைதானத்தில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன
டெல்லி அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்திலும், குஜராத் அணி 4வது இடத்திலும் உள்ளன.இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேற இது முக்கிய போட்டியாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.