அபராஜித், விஜய் சங்கர் அரைசதம்.. திருச்சி அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக்
சேப்பாக் தரப்பில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 63 ரன்கள் அடித்தார்.;
image courtesy:twitter/@TNPremierLeague
நெல்லை,
டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்று வரும் 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 5 ரன்களிலும், மொகித் ஹரிகரன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் பாபா அபராஜித் - விஜய் சங்கர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களில் பாபா அபராஜித் 63 ரன்களிலும், விஜய் சங்கர் 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் அடித்துள்ளது.
இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி திருச்சி அணி களமிறங்க உள்ளது.