இந்தியாவுக்கு எதிரான ஒருநாள்,டி20 தொடரை தவறவிடும் ஆஸி.கேப்டன்

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது.;

Update:2025-09-02 14:48 IST

image courtesy:ICC

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும் பின்னர் டி20 தொடரும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரை ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தவறவிடுகிறார். முதுகு வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்