பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. முன்னணி வீரர்களுக்கு இடமில்லை

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் 26-ம் தேதி தொடங்குகிறது.;

Update:2025-12-23 08:26 IST

image courtesy:ICC

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிந்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 2-ம் தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக டாட் மர்பி மற்றும் ஜை ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஜை ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.

Tags:    

மேலும் செய்திகள்