கேப்டன் பவுமாவை பாராட்ட வேண்டும் - எய்டன் மார்க்ரம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது.;

Update:2025-06-15 11:48 IST

Image Courtesy: @ICC

லார்ட்ஸ்,

3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி. கோப்பை ஒன்றை தென் ஆப்பிரிக்க அணி வென்றுள்ளது.

இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருது (0 ரன், 136 ரன்) மார்க்ரமுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் இன்னிங்சில் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த பின் எப்படி விஷயங்கள் சென்றது என்பதைப் பார்ப்பது வித்தியாசமானதாக இருக்கிறது. அதற்கு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. அது வேலை செய்தது. லார்ட்ஸ் மைதானம் ஒவ்வொரு வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பும் இடமாகும்.

அங்கே நிறைய தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னே வென்றது சிறப்பான நாள். இந்தப் போட்டி ஒரு தலைப்பட்சமாக இருக்கவில்லை. நீங்கள் அழுத்தத்தை உள்வாங்கி உங்களுடைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். நாதன் லயனுக்கு எதிரான போட்டி சிறப்பானது. வெற்றிக்கோட்டை தாண்டிச் செல்வது கடினமாக இருந்தது.

எங்களுடைய கேப்டன் பவுமாவுக்கு நிறைய பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும். அவர் எங்களை முன்னிருந்து வழி நடத்தினார். அவர் முக்கியமான ரன்களை அடிப்பதற்கான வழியைக் கண்டறிந்தார். அவர் விளையாடியதைப் போன்ற ஆட்டத்தை தான் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்