தோனியின் சாதனையை சமன் செய்த டி காக்

தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக் தொடர் நாயகன் விருது வென்றார்.;

Update:2025-11-09 22:20 IST

லாகூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானும், 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றது. இந்நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஆட்டம் பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக் தொடர் நாயகன் விருது வென்றார். இதனால் அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஒருநாள் தொடரில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை (POTS) வென்ற விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற தோனியின் (7) சாதனையை டி காக் சமன் செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்