லக்னோவுக்கு எதிரான தோல்வி....குஜராத் கேப்டன் கூறியது என்ன ?

லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.;

Update:2025-04-13 07:48 IST

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 60 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி தொடர்பாக குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது,

விக்கெட்டை ஆரம்பத்திலிருந்தே ரன்கள் அடிப்பதற்கு அவ்வளவு சுலபமாக இல்லை . தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது எங்களின் திட்டத்திற்கு உதவவில்லை. நாங்கள் ஆட்டத்தில் பின்தங்கியிருந்தோம், ஆனால் நாங்கள் பந்து வீசும்போது 10-11வது ஓவருக்குப் பிறகு சிறிது பனி இருந்தது. பந்து நாங்கள் நினைத்த அளவுக்கு நிற்கவில்லை. போட்டி இறுதி ஓவருக்குச் சென்றது எப்போதும் எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். இரண்டாவது டைம்அவுட்டில் இந்த ஆட்டத்தை முடிந்தவரை ஆழமாக எடுத்து செல்ல வேண்டும் என்று தான் நினைத்தோம் . என தெரிவித்தார் .

Tags:    

மேலும் செய்திகள்