3வது டி20: தொடரை வெல்லுமா இந்தியா ? இலங்கையுடன் இன்று மோதல்

தொடரை வசப்படுத்த இந்திய அணியினர் ஆர்வமாக உள்ளனர்;

Update:2025-12-26 15:25 IST

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது.

தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை வசப்படுத்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியினர் ஆர்வமாக உள்ளனர்.அதேநேரத்தில் முந்தைய போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி முயற்சிக்கும். 

இந்த மைதானத்தில் பெண்கள் சர்வதேச போட்டி நடக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்