3வது டி20: இந்திய அணிக்கு 113 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது;

Update:2025-12-26 20:38 IST

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹசினி பெரேரா 25 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் , தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்