இந்திய கிரிக்கெட் வீரர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த தோனி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது;
ராஞ்சி ,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 30ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணி வீரர்களுக்கு விருந்து வைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் ராஞ்சி வந்துள்ளதால், அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து தோனி விருந்து வைத்துள்ளார்.
விருந்து முடிந்த பின் தோனி மற்றும் விராட் கோலி ஒரே காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.