முத்தரப்பு டி20: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி
இலங்கை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.;
ராவல்பிண்டி,
பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கமில் மிஷ்ரா 76 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்களே எடுத்தது. இதனால் இலங்கை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆஹா ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட் வீழ்த்தினார். 2-வது வெற்றியை பெற்ற இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே வெளியேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.