கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.;

Update:2025-02-12 13:17 IST

ஆமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி சூப்பர் வெற்றியை பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இவ்விரு அணிகளுக்கு இதுவே கடைசி ஒரு நாள் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணியினரும் முனைப்பு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நடக்கும் ஆமதாபாத்தில் இந்திய அணி இதுவரை 20 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி 11-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் இங்கு தோற்றது நினைவிருக்கலாம். இங்கிலாந்து அணி 4 ஆட்டத்தில் ஆடி ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

இந்திய அணி

ரோகித் சர்மா (கே), கே.எல். ராகுல் (வி.கீ), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது சமி, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர். அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இங்கிலாந்து அணி:

பிலிப் சால்ட் (வி.கீ), ஜோஸ் பட்லர் (கே), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், மார்க் வுட், சாகிப் மஹ்மூத், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன்.

Tags:    

மேலும் செய்திகள்