முதல் டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இந்த போட்டி நடக்கிறது.;

Update:2025-12-09 14:21 IST

கட்டாக்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 12-ல் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்