சூப்பர் 6 சுற்று: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
204 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபரா வெற்றி பெற்றது.;
ஹசாரே,
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு தகுதி பெற்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சூப்பர்6 சுற்றில் இன்று போட்டியை நடத்தும் ஜிம்பாப்வேயை புலவாயோவில் எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. ஆரோன் ஜார்ஜ் 23 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விஹான் மல்ஹோத்ரா நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். பொறுப்புடன் விளையாடிய அவர் சதமடித்தார்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 353 ரன்கள் இலக்குடன் ஜிம்பாப்வே விளையாடியது.
தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் ஜிம்பாப்வே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் லிராய் மட்டும் அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இதனால் 37.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது.இந்திய அணியில் சிறப்பாகி பந்துவீசி உதவ் மோகன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் 204 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபரா வெற்றி பெற்றது.