சர்வதேச டி 20 கிரிக்கெட்: ஷதாப் கானின் சாதனையை முறியடித்த ஷாகின் அப்ரிடி

பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.;

Update:2025-09-24 03:00 IST

கோப்புப்படம்

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை தரப்பில் காமிந்து மெண்டிஸ் 50 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடந்து 1334 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஷதாப் கானின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷதாப் கானை (112 விக்கெட்) பின்னுக்கு தள்ளி ஷாகின் அப்ரிடி (114 விக்கெட்) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் ஹாரிஸ் ரவூப் (130 விக்கெட்) முதல் இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்